டிரையாட் தமிழ்க்கல்வி
பொதுவாகக் கலாச்சாரம் என்பது ஒரு மனித இனம் பற்றிய வரலாறு; அதற்கு மொழி அறிவு இன்றியமையாதது. "டிரையாட் தமிழ்க்கல்வி" (கிரீன்ஸ்போரோ/ஹைபாயிண்ட்/வின்ஸ்டன்சேலம் வடகரோலினா) சௌந்தரராஜன் கனகராஜன் , முத்தையா சின்னசாமி மற்றும் சத்யா ஜெயதேவ் ஆகிய தமிழ் ஆர்வலர்களால் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.அந்நாளிலிருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்கள் தமிழ்ப்பள்ளியின் நோக்கம், நம் அடுத்த தலைமுறையினருக்கு நம் தமிழ் மொழி மூலமாக நமது தமிழர்ப்பண்பாடு, வரலாறு ஆகியவை அறியப்படவேண்டும் என்பதே!
இதன் தொடர்ச்சியாக ,அருள் கார்த்திகேயன் அவர்களின் சீரிய முயற்சியால் வின்ஸ்டன்சேலம் கிளை தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.